• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புஜாரா சதம்

December 6, 2018 தண்டோரா குழு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்துள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது ஏற்கனவே நடந்த டி20 போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில், இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் துவங்கியது. இந்திய நேரப்படி காலை 5.30 மணியளவில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து,தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 2(8),முரளி விஜய் 11(22) ரன்களுக்கு வெளியேற,பின்னர் களமிறங்கிய புஜாரா நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.246 பந்துகளில் 123 ரன்கள் குவித்த புஜாரா ஆட்டத்தின் 87.5-வது பந்தில் வெளியேறினார்.பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்ச், ஹேசல்வுட், பாட் கும்மினிஸ். நாதன் லெயின் தலா 2 விக்கெட் குவித்துள்ளனர்.

மேலும் படிக்க