• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூருவில் 144 தடை உத்தரவு

September 12, 2016 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் போராட்டம் வெடித்த நிலையில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு இன்று வெளியானது.அதில், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வரை காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மைசூர், மாண்டியா, மைசூர் ரோடு ஆகிய பகுதிகளில் தமிழ் பதிவு எண் கொண்ட லாரிகளைக் கன்னட அமைப்பினர் தீவைத்து கொளுத்தினர். மைசூர் ரோடு பகுதியிலுள்ள அடையார் ஆனந்தபவன் ஹோட்டலை 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்கியும் தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 5 மணி முதல் கர்நாடகத்தின் பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க