• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்.ஐ.வி.யால் வேலையை இழந்த பெண் 3 ஆண்டுக்கு பின் நீதிமன்றம் மூலம் பணியை பெற்றார்

December 4, 2018 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் மருந்து நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆண்டு திடீர் என அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பணிக்கு மருத்துவ விடுப்பு எடுத்தார். பின்னர் 2 மாதம் கழித்து பணிக்கு திருப்பினர் அந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டை பெற வேண்டும் என அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார். அவர் இதுவரை சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றுகளை சமர்ப்பிக்கும் மாறு அந்நிறுவனமும் கோரியது. அப்பெண் தன் சிகிச்சை பெற்ற சான்று அனைத்தையும் சமர்ப்பித்தவுடன் அந்நிறுவன ஊழியர்கள் ஆவணங்களை சரி பார்த்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் மருத்துவ சான்றிதழில் அவருக்கு எச்ஐவி குறிப்பிட்ட இடத்தில் பாசிட்டிவ் என குறிப்பிட்டிருந்தது.

அந்த பெண்ணிடம் இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் கேட்டபோது தனக்கு எச்ஐவி பதிப்பு இருப்பது உண்மைதான் இந்த நோய் எனது கணவர் மூலம் தனக்கு வந்ததாக குறிப்பிட்டார். இதை கேட்ட அந்நிறுவன அதிகாரிகள் சற்று அதிர்ந்து போனார்கள். அப்பெண் தனக்கு எச்ஐவி இருப்பது உண்மை என ஒப்புக்கொண்ட அடுத்த 30 நிமிடங்களில் அவர் அந்நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகவலை கேட்டதும் அந்த பெண் அதிர்ந்து போனார். மேலும் அந்த பெண் தன்னை பணி நிக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் அவருக்கு எச்ஐவி உள்ளதால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடும் படி அப்பெண் அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக பணி நீக்க உத்தரவில் அவர் அதிக விடுமுறை எடுத்தாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து புனே தொழிலாளர் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அந்த பெண் தானாக பணியில் இருந்து வெளியேறியதாகவும் தாங்கள் வெளியேற்றவில்லை என அந்நிறுவனம் வாதாடியது . கடந்த 2015ம் ஆண்டு இவை அனைத்தும் நடந்தது.
மூன்று வருடமாக நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் எச்ஐவி பாதிப்பு இருந்தால் தொழிலாளியை பணியில் இருந்து நீக்க சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவது என்பது மனித தன்மையற்ற செயலாகும். இந்த வழக்கில் விசாரணையில் அந்த பெண்ணுக்கு எச்ஐவி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த நிறுவனம் அவரை பணி நிக்கம் செய்தது உறுதியாகியுள்ளது.

இதனால் அந்நிறுவனம் மீண்டும் அந்த பெண்ணுக்கு பணி வழங்க வேண்டும் மற்றும் பணி நிக்கம் செய்யப்பட்ட காலம் முதல் மீண்டும் பணிக்கு சேர்க்கும் வரையிலான சம்பளத்தை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பெண்ணின் கணவர் எச்ஐவியால் உயிரிழந்து விட்டார். இந்த நோய் இருப்பதால் அந்த பெண்ணின் குடும்பமும் இவரை கைவிட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க