• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போய் வாருங்கள் மஸ்தானம்மா : 107 வயது யூடியூப் புகழ் சமையல் கலைஞர் காலமானார்

December 4, 2018 தண்டோரா குழு

யூடியூபில் புகழ்பெற்ற ஆந்திராவை சேர்ந்த 107 வயது சமையல் கலைஞர் மஸ்தானம்மா காலமானார்.

ஹைதராபாத்தை சேர்ந்த கே. லட்சுமனன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீகாந்த்ரெட்டி ஆகியோரால் 2016ம் ஆண்டு country food என்ற யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது. பின் லட்சுமனனின் தூரத்து சொந்தமான மஸ்தானம்மா என்ற பாட்டி கத்திரிகாய் கறி சமைக்கும் வீடியோவை யூட்யூபில் வெளியிட்டனர். அதை 75,000ம் பேர் பார்த்தனர். இதன் மூலம் மஸ்தானம்மா பாட்டி யூடியூபில் மிகவும் பிரபலமானார்.

ஆந்திர மாநிலம் குண்ட்டூரை சேர்ந்த இவர் யூட்யூபில் ருசிகரமான உணவு வகைகளை சமைத்து இந்த இரண்டு வருடத்தில் 12 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை தனக்குள் வைத்துள்ளார். அனைத்து வகையான உணவையும் செய்யும் மஸ்தானம்மாவிற்கு கடல் உணவு செய்வதில் கைதேர்ந்தவர். கிராமத்து முறையில் கே.எப்.சி சிக்கன், காபாப் உள்ளிட்டவைகளையும் சமைத்து அசத்தியுள்ளார். சென்ற ஆண்டு இவரது 106 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனுப்பி வைத்த பணத்தில் கொண்டாடினார். 11 வயதில் திருமணம் நடந்த மஸ்தானம்மாவுக்கு, மொத்தம் ஐந்து குழந்தைகள், தற்போது ஒருமகன் மட்டும்தான் இருக்கிறார். 22ம் வயதில் தன் கணவனை இழந்த மஸ்தானம்மா, அவராகவே தன் குழந்தைகளை வளர்த்தார்.

இந்நிலையில்,கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மஸ்தனம்மா காலாமானார். பல வகையான உணவையும் சமைத்து அனைவரையும் மகிழ்வித்த மஸ்தனம்மா இன்று இல்லை, இது அவரது ரசிகர்களுக்கு பேரிழப்புதான்.

மேலும் படிக்க