செயற்கை மழையை வர வைத்தாவது தாமரையை மலர செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைபெற்ற திமுக தோழமை கட்சிகளுடனான ஆர்ப்பாட்டத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லை. புல் கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா? குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக என கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தா கிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்,திருமாவளவன்..ஆர்ப்பாட்டத்தில்…பேசுகிறார்..”திமுக அணியை..பலவீனப்படுத்த..பாஜக..முயல்கிறது..என்கிறார்…ஆக இவரின் கவலை..அணை யைப்பற்றியது அல்ல…அணி யைப்பற்றியதுதான்! என பதிவிட்டுள்ளார்.
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை