• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லையில் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் காவல் ஆய்வாளர்

December 4, 2018 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தந்தையை இழந்து வறுமையில் வாடும் 3 குழந்தைகளை தத்தெடுத்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது.

சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சியை சேர்ந்த கோட்டூர்சாமி என்பவர் இருதினங்களுக்கு முன் சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தை வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிப்பதற்காக கோட்டூர்சாமியின் வீட்டிற்கு புளியங்குடி காவல் ஆய்வாளர் ஆடிவேல் சென்றார்.அப்போது தான் அந்தக் குடும்பம் வறுமையில் இருப்பது அவருக்கு தெரியவந்தது.

கை, கால் எலும்பு முறிவால் முடங்கிய தாயையும், மாற்றுத்திறனாளி சிறுவன் உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் தந்தை இழந்து வறுமையில் வாடுவதை கண்ட காவல் ஆய்வாளர் ஆடிவேல் மூன்று குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தார். இதையடுத்து 3 குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களது வாழ்நாள் முழுவதுக்குமான செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க