• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் புல் கூட முளைக்க முடியாத கூழலில் தாமரை எங்கிருந்து மலரும்? – முக. ஸ்டாலின்

December 4, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் புல் கூட முளைக்க முடியாத கூழலில் தாமரை எங்கிருந்து மலரும்? thimugththgதிமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து, மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின்,

தற்போது நடைபெற்றுவரும் போராட்டம் அரசியலுக்காகவோ, தோ்தலுக்காகவோ அல்ல தமிழக விவசாயிகளுக்காக நடைபெறுகிறது. அணை கட்ட அனுமதி கிடைத்ததற்கு தமிழக அரசு தான் காரணம். இது குறித்து விவாதிக்க உடனடியாக சட்டபேரவையை கூட்ட வேண்டும். காவிரி நீரை தடுக்கும் பணியில் கர்நாடக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது, மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது. கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்கள் அதில் இருந்து மீண்டு வருவதற்கு 20 ஆண்டுகள் ஆகும். தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களில் தமிழக அரசு சார்பில் ரூ.60 ஆயிரம் கோடி நிவாரணமாக கேட்ட நிலையில் மத்திய அரசோ ரூ.3 ஆயிரம் கோடியை மட்டுமே வழங்கி தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. திமுக சார்பில் ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியத்திற்காக பிரதமா் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தால் பிரதமர் மோடி எந்த சூழலிலும் தமிழகத்திற்குள் வரமுடியாத நிலையை ஏற்படுத்துவோம். தமிழகத்தில் புல் கூட முளைக்கமுடியாத கூழலில் தாமரை எங்கிருந்து மலரும்? குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவில் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க