• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவரை கண்டுபிடித்து தருமாறு மனைவி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 3, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை எனும் ஊரைச் சேர்ந்தவர் ஜெயவேணு, இவர் ஒரு வியாபாரி. கடந்த 1.10.2018 அன்று வழக்கு ஒன்றுக்கு சாட்சி சொல்வதற்காக வந்துள்ளார். வந்தவரை சாட்சி சொல்ல கூடாது என்று அவ்வழக்கின் எதிர் தரப்பினர் பிரகாஷ், செந்தில் ராஜா, பாலன் (எ) பர்கூர் பாலன் ஆகியோர் மிரட்டியுள்ளனர். ஜெயவேணு பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க அங்கிருந்து விலகி வந்துவிட்டார். பின் சக்தி என்பவர் அலைபேசியிலிருந்து அவர் மனைவி பாலதீபாவிடம் நடந்ததை கூறியுள்ளார்.

பின்னர் வீடு திரும்பாத கணவர் மீது 3.10.2018 அன்று துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாலதீபா. அன்று அந்த புகாரை ஏற்கவில்லை 2006 வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்று, பின் 22.10 .2018 அன்று காணாமல் போனதாக புகார் ஏற்றுக் கொள்ளபட்டது. இந்த வழக்கில் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதால் பாலதீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேரணை மனு தாக்கல் செய்தார். பின் ராஜேஷ் என்பவர் 1.10.2018 அன்று ஜெயவேணுவை கொன்று உடலை நஞ்சுண்டாபுரம் கிணற்றில் வீசி விட்டதாகவும், அதில் குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதாகவும் 24.11.2018 அன்று காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயவேணு பற்றி சரியான தகவலும் அல்லது அந்த கிணற்றிலிருந்து உடலை மீட்டு தருமாறு பாலதீபா கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

மேலும் படிக்க