• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை

December 3, 2018 தண்டோரா குழு

இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் அதிபர் சிறிசேனா, திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். எனினும் அந்நாட்டில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது. மேலும், ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிச., 12ம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க