• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாக்கடையில் இருந்து 5 மாத சிசு மீட்பு!

December 3, 2018

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள பஜனை கோயில் அருகே சுமார் ஐந்து மாதங்களான சிசு உயிருடன் சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள பஜனை கோவில் வீதி அருகே இருக்கும், பெருமாள் கோவில் மைதானம் அருகே உள்ள சாக்கடையில் இன்று காலை சுமார் ஐந்து மாதமான சிசு உயிருடன் கிடந்தது. இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் உடனடியாக கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் உயிரோடு இருக்கும் சிசுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்து மாதங்கள் ஆன இந்த சிசு ஆண் குழந்தை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த சிசு தொப்புள் கொடியுடன் அறுந்து கிடந்தது காண்போரையெல்லாம் சோகத்தில் ஆழ்ந்தியது.

இந்த சிசு எப்படி இங்கு வந்தது ? இதன் தாய் யார் ? என கோவை இராமநாதபுரம் ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க