• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

November 29, 2018 தண்டோரா குழு

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன்,

“தென் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் மாலத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும்,தென் தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும்,வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,மிதமான மழை பெய்யக்கூடும்.டெல்டா மாவட்டங்கள்,புதுக்கோட்டை,கடலூர் புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மேக மூட்டத்துடன் காணப்படும்.நகர்ப்புறங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது.சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழையை எதிர் பார்க்க முடியாது.தென் தமிழகத்திலும்,வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நல்ல மழை இருக்கும்.அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையளவு 31 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 35 செ.மீயாக இருக்கும்.எனவே 12 சதவீதம் மழை குறைவாகும்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க