• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பிரபல சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை

November 29, 2018 தண்டோரா குழு

சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் நடிகை ரியாமிகா(26). இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்,எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் அவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் ரியாமிகா, அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை.பிரகாஷ்,ரியாமிகாவின் காதலன் தினேஷ் ஆகியோர் அறையின் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து அந்த அறையின் பின்பக்கம் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தனர்.அப்போது ரியாமிகா,தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் மனமுடைந்து ரியாமிகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.எனினும்,படவாய்ப்புகள் இல்லாததுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க