• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏர் இந்தியா விமானத்தில் நிவாரண பொருட்களுக்கு கட்டணமில்லை – சுரேஷ் பிரபு

November 28, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை,திருவாரூர்,நாகை,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலில் கோர தாண்டவத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.இதையடுத்து,அரசு மற்றும் தனியார் அமைப்பினர்,தொண்டு நிறுவனங்கள் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,நிவாரண பொருட்களை வழங்கும் தன்னார்வலர்களுக்கு உதவும் வகையில்,அரசு பேருந்துகள்,ரயில்களில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கான சரக்கு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில்,தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்களை எடுத்து செல்ல ஏர் இந்தியா விமானத்தில் சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.மேலும்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிராத்திப்பதாகவும்,ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க