• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான மூலம் மின்கம்பம் நட வேண்டும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் புது ஐடியா !

November 27, 2018 தண்டோரா குழு

புயல் பாதித்த பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் இந்த மாவட்டங்களில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. தற்போது வரை இந்த மாவட்டங்களுக்கு மின் விநியோகம் கொடுக்க மின் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசான், ஓ.எஸ் மணியன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பர்வையிட்டனர்.

அப்போது இதுகுறித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசான்,

மின் கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறினார். அப்போது உடனிருந்த ஓ.எஸ் மணியன், இது சாத்தியமில்லை என்று சீனிவாசனிடம் கூறியுள்ளார். இருப்பினும் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “வெளிநாட்டில் கடலுக்கடியில் நகரத்தை அமைக்கிறார்கள் கடலில் பாலம் போடுகிறார்கள். ஆனால் நம்மால் விமானம் மூலம் மின் கம்பத்தை நடமுடியாதா? உடனே இதற்கான கண்டுபிடிப்பை கண்டுபிடியுங்கள்” என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்த புதிய ஐடியா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் கிண்டலடித்து

மேலும் படிக்க