November 27, 2018
தண்டோரா குழு
தன் நகைச்சுவை நடிப்பின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானவர் நடிகர் ஜாக்கிசான்.இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிகர்கள் உண்டு.கடந்த 1990-ஆம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்லெய்ன் நக்.இவருக்கும் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக் (19). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது ஓரினச்சேர்க்கையாளர் அட்டுனம்(வயது 31) குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முதன்முதலாக இணையத்தில் வெளியிட்டார்.இந்த பதிவின் மூலம் எட்டா நக் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது உலகிற்கு தெரியவந்தது.
இதனால் அவர் வீட்டை விட்டு தனியே போய் தன் ஓரினச்சேர்க்கை காதலி அட்டுனும் உடன் வசித்து வந்தார்.கனடா நாட்டைச் சேர்த சமூக ஊடக பிரபலமான அட்டுன்,கனடா நாட்டில் ஊடக சார்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எட்டா நக் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டாதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் தங்களது திருமண சான்றிதழினை வெளியிட்டுள்ள எட்டா நக்,தங்களது திருமணம் கன்னடா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத்தினை திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.தற்போது அவர்களது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.