• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த கேரள ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா இடமாற்றம்

November 26, 2018 தண்டோரா குழு

சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சபரிமலையில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு கட்டுபாடுகளை பக்தர்களுக்கு விதித்து விதித்துள்ளனர்.அதன்படி பக்தர்களின் வாகனங்கள் சபரிமலையின் நுழைவு வாயிலான நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரசு பேருந்தில் பம்பை செல்ல வேண்டும்.

இந்நிலையில்,சபரிமலைக்கு கடந்த 20-ந் தேதி இருமுடிக்கட்டுடன் காரில் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.அப்போது அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஸ்சந்திராவிற்கு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து,அமைச்சருடன் வந்திருந்த பா.ஜனதா தொண்டர்களின் கார்களை பம்பைக்கு அனுமதிக்காததால்,அவர் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.பின்னர் சாமி தரிசனம் முடித்து திரும்பும் வழியிலும் பொன் ராதாகிருஷ்ணனுடன் சென்ற தொண்டர்களின் கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து,பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,கேரள காவல்துறையினர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்து விட்டதாக கூறி குமரியில் நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.இதற்கிடையில்,பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி மீதும்,கேரளா அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கேரள பாஜக புகார் அளித்தது.

இந்நிலையில்,திருச்சூர் காவல் ஆணையராக யதீஷ் சந்திராவை இடமாற்றம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.அதைபோல் திருச்சூர் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த புஷ்பாகரனை நிலக்கல் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க