• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சார்லஸ் மைக்கேளின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடுள்

November 24, 2018 தண்டோரா குழு

காது கேளாதோருக்கான சைகை மொழியை உருவாக்கிய சார்லஸ் மைக்கல் திலேப்பே-வின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூகுள் நிறுவனம் அவருக்கு டூடுள் வெளியிட்டுள்ளது.

சார்லஸ்-மிசெல் டி ஐயெபீ ((Charles-Michel De l’Epee)) என்பவர் தமது வாழ்க்கையை ஏழை மற்றும் காதுகேளாத குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணித்தவர். 1789ம் ஆண்டு சார்லஸ் தனது 77ம் வயதில் காலமானார். மைக்கல் சார்லஸ்க்கு இன்று 306 வது பிறந்தநாள் இவரை சைகை மொழியின் தந்தை என உலகம் போற்றுகிறது.

பிரின்ஸ் நகரில் இருந்த உயர் குடும்பம் ஒன்றில் சார்லஸ் நவம்பர் 24 1712ம் ஆண்டு பிறந்தார். இவரது பிறந்த நாளை மாற்றுத்திறனாளிகள்
அனைவரும் தங்களின் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர்.கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கும் வாய் பேசும் திறன் இல்லாதவர்களுக்கும் 1760 ஆண்டு அன்று தனியாக பள்ளி கூடத்தை நிறுவினார்.

காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்கள் மற்றவர்களின் உதடு அசைவை வைத்து தான் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வருகிறார்கள்.
ஆனால் வேறு மொழியில் பேசும் போது தாய்மொழிக்காரர்களுக்கு அதனை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை போக்கவே காது கேளாதோருக்காக வாய் பேச முடியதவர்களுக்கு பிரத்யேக சைகை மொழி உருவாக்கப்பட்டது.

சார்லஸ் மைக்கல் திலேப்பே என்பவர் தான் முதன்முதலில் காது கேளாதோருக்காக வாய் பெசததோருக்காக சைகை மொழியை உருவாக்க முயன்றார். இவருடைய தந்தை ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முறை குடிசைப்பகுதிக்கு சார்லஸ் சென்றார்.

அப்போது காது கேட்கும் திறன் இல்லாத இரண்டு சகோதரிகள், ஒருவருக்கொருவர் சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சார்லஸ்க்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த சைகை மொழியையே நாம் ஏன் காது கேளாத மற்றவருக்கும் கொண்டு செல்லக்கூடாது என்று நினைத்தார்.

பின்னாளில், இதுபோன்ற சைகை மொழிக்காகவே தனியாக பள்ளி ஒன்றையும் தொடங்கினார். காது கேளாதோர் அங்கு பயில பல சலுகைகளையும் வழங்கினார்.

இவருக்கு மதக் கல்வியை போதிப்பதில் தான் ஆர்வம் அதிகம் இருந்தது.ஆனால் அதனைகடந்து மாற்றுதிறனாளிகளின் மொழியை உருவாக்குவதில் ஈடுப்பட்டார் சார்லஸ். இவரின் மொழி அறிவின் மூலம் தன் மாற்றுத்திறனாளிகள் தங்களது நியாயத்தை நிதி மன்றத்தில் வைக்க முடிந்தது.

சார்லஸ்-மிசெல் டி ஐயெபீனால் உலகளவில் வாய் பேசமுடியாத, காது கேளாத குழந்தைகளுக்கும் கல்வியறிவு கிடைக்கும் வகையில் முக்கிய திருப்பமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வகையில் 1789ம் ஆண்டு சார்லஸ் தனது 77ம் வயதில் காலமானார். இன்று மைக்கல் சார்லஸ்க்கு 306 வது பிறந்தநாள். இவரை கெளரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இவருக்கென பிரத்யேகமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க