November 24, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்.இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து வருகின்றார்.
இதற்கிடையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல முன்னணி நடிகர்கள் தனது ரசிகர்கள் மூலம் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்களும் உதவ, அதற்கு உதயநிதி டுவிட்டரில் நன்றி தெரிவித்து இருந்தார்.
அப்போது ஒருவர் ‘உங்களுக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்று கேட்டார். அதற்கு உதயநிதி ‘அவர்கள் என் ரசிகர்கள் இல்லை என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள்’ என கூறி பதிலடி கொடுத்தார்.