• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் : முதலமைச்சருடன் மத்திய குழு சந்திப்பு

November 24, 2018 தண்டோரா குழு

கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழு முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது.

தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. புயல் தாக்கி ஒரு வாரம் ஆனா நிலையில் தற்போதும் மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய குழுவை உடனடியாக அனுப்பி கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்து, நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று, மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.

மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நிதித்துறை ஆலோசகர் கவுல், மத்திய வேளாண்மை துறை இயக்குனர் வத்சலா, மத்திய ஊரக வளர்ச்சி துறை துணை செயலாளர் மானிக் சந்திரா பான்ட், மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்ஹால் ஆகிய 5 பேர் நேற்று இரவு 8.15 மணிக்கு சென்னை வந்தனர். இவர்களுடன் தமிழகத்தில் பணியாற்றும் மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகிய 2 பேர் ஆய்வில் இணைந்து கொண்டனர்.

மொத்தம் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் பின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சில குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிட உள்ளனர். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர்கள் நேரில் சந்தித்து புயல் பாதிப்பு குறித்து கேட்டறிய உள்ளனர். தொடர்ந்து 3 நாட்கள் அதாவது 26ம் தேதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 27ஆம் தேதி மீண்டும் சென்னை வந்து, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க