• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வோடபோன் நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த கோவை மாநகராட்சி !

November 23, 2018 தண்டோரா குழு

மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை உடைத்தால் வோடபோன் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 41வது வார்டில் இந்திய உணவுக்கழக சாலையில் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி ஏதும் பெறாமல் தொலை தொடர்பு கேபிள்களை பதிக்க வோடபோன் நிறுவனத்தார் தரையில் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, இந்திய உணவுக்கழக சாலையில் செல்லும் மாநகராட்சி பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இதனால், அப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க இயலாமல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதுடன் மாநகராட்சிக்கு அவப்பெயர் வர காரணமாக இருந்ததால் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வோடபோன் நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க