• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது – கமல்

November 22, 2018 தண்டோரா குழு

ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார்.புயல் பாதிக்கப்பட்ட இடங்களில்,முதல் இடமாக தஞ்சைக்கு சென்ற அவர்,பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.புயலால் ஏற்பட்ட சேதங்களையும் தனது கட்சியினருடன் சென்று பார்வையிட்டார்.

இதற்கிடையில்,நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“தரையில் கால் பாவிட,மக்களோடு மக்களாக நின்று பார்த்தால்,கேட்டால்… புரியும் சோகம்,தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது.கேட்கிறதா அரசுக்கு? அம்மையப்பன்,அம்மாபேட்டை,கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம்,எங்களுக்கு உணவு இருக்கிறது,மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்பட வைத்தது.இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க