November 22, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் உயிரிழப்புக்கு குறைந்தது ரூ.20 லட்சம் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம்,வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.இதற்காக,அவர் திருச்சி சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,
“நாகை,திருவாரூர்,தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிட வேண்டும்.கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் பிரதமரிடம்,முதல்வர் வலியுறுத்த வேண்டும்.நிவாரண உதவி போதுமானதாக இல்லை.உயிரிழப்புக்கு குறைந்தது ரூ.20 லட்சம் தர வேண்டும். தென்னைக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்”.இவ்வாறு கூறியுள்ளார்.