• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உற்பத்தி திறன் குழு மற்றும் இந்திய தரவட்ட குழுவின் கருத்தரங்கம்!

November 20, 2018 தண்டோரா குழு

கோவை உற்பத்தி திறன் குழு மற்றும் இந்திய தரவட்ட குழுவின் சார்பில்,தரமே தனித்துவத்தை தரும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது.

கோவை ஆவராம்பாளையம் கோ இண்டியா அரங்கில் கோவை உற்பத்தி திறன் குழுவின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் முன்னாள் தலைவரும் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனருமான கவிதாசன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உற்பத்தி திறன் குழுவின் தலைவர் நடராஜன் பேசுகையில்,தொழில் வளர்ச்சிக்கு,தரத்தை தக்க வைப்பதிலும்,மேம்படுத்துவதிலும்,அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் நடத்தப்படும்,தர மேம்பாடு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று அனைத்து தொழில் துறையினரும் பயனடைய வேண்டும் என்றார்.

இதனைதொடர்ந்து பேசிய இந்திய தர வட்ட குழுவின் கோவை கிளை இயக்குனர் சங்கரசுப்ரமணியம்,குறைந்த விலையில்,அதிநவீன தொழில்நுட்பம்,சிறந்த தரத்துடன் பொருட்களை உற்பத்தி செய்தால் மட்டுமே,தொழில்துறையில் சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்க முடியும்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோவை தொழில் துறையில் நவீன தொழில் நுட்பத்தின் பங்கு,தரத்தில் தொழிலாளர்களின் பங்கு,என பல்வேறு தலைப்புகளில் தொழில் துறையினர் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க