தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் செய்யப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை என சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது,தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்துக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.இதில் பேருந்தில் சிக்கிக் கொண்ட கோகிலவாணி,ஹேமலதா,காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாகினர்.
இந்த வழக்கில் வழக்கில் நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இதற்கிடையில்,எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவர்கள் மூவரும் வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம்,
“3 பேர் விடுதலை செய்யப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை என்றார்.மேலும்,7 பேர் விடுதலையில் ஆளுநர் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.அவர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்”.
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்