தமிழக அரசின் உத்தரவின்படி கோவை மாநகர காவலர்களுக்காக மன அழுத்தத்தை கையாள்வது குறித்து நடைபெறும் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவங்கியது.
கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் முதல் 2 நாட்களுக்கு காவலர்களுக்கும்,3ஆம் நாள் காவலர்களுடன் அவர்களது குடும்பத்தினருக்கும் அதாவது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் இருவர் பெங்களூர் சென்று இதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு,இந்த பயிற்சியை வழங்குகின்றனர்.
பயிற்சியின் முதல் நாளான இன்று 80 காவலர்கள் பங்கேற்றனர்.மன அழுத்தம் ஏற்படும் வழிகள்,அதனை கண்டறிவது நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்,அமைதியான சூழலை உருவாக்கி கொள்வது என பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் காணொளி காட்சிகள் வாயிலாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்!