• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் காரணமாக மாலை 6 மணிக்குமேல் பேருந்து,மின்சார சேவை நிறுத்தம்!

November 15, 2018 தண்டோரா குழு

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் நாகை,கடலூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,திருவாரூர்,காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில்,இந்த மாவட்டங்களில் மாலை 6 மணியளவில் பேருந்துகள் நிறுத்தபட்டு மின்சாரமும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.

தமிழகத்தில் பீதியை கிளப்பியுள்ள கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ளது.புயல் கரையை கடக்கும் பொழுது கடலோர மாவட்டங்களில் மிக கனமான மழை மற்றும் மிகவேகமாக காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் அரசு சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும்,கஜா புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 4 மணிக்கு முன்பே வீட்டுக்கு அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து புயல் பாதிப்பு விடப்பட்டுள்ள அந்த 7 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குமேல் பேருந்து சேவை மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் அறிவிகப்பட்டுள்ளது.

மேலும் படிக்க