• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் இருவர் உயிரிழப்பு

November 15, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூர்,ஈரோடு நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக வெளிநோயாளிகளாக 800 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.அதேபோல தினமும் இரண்டிலிருந்து மூன்று பேர் வரை பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் உயிரிழந்து வருகின்றனர்.இந்த தொடர் உயிரிழப்புகளுக்கு மருத்துவமனை நிர்வாகத்தில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மக்கள் மத்தியில் காய்ச்சலால் ஏற்படும் மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அலாவுதீனின் மகன் நிசார் அகமது என்பவர் நேற்று மதியம் 2:25 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சுமார் 2:50 மணியளவில் உடல்நிலை மோசமானதையடுத்து உயிரிழந்தார்.

அதேபோல கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோதியின் மனைவி மெச்சம்மாள்(67).இவர் கடந்த எட்டாம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 10:50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் 37 பேரும்,டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 6 பேரும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் 89 பேரும் என மொத்தம் 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சலினால் ஏற்படும் மரணங்களை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறையும், மாநகராட்சியும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தீவிரமாக செயல்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க