• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“வந்தா ராஜாவாதான் வருவேன்” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் – நடிகர் சிம்பு

November 14, 2018 தண்டோரா குழு

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில்,சிம்பு நடித்த AAA பட பிரச்சனை இன்று வரை ஓயவில்லை.தற்போதும் அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீண்டும் AAA படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என கூறி வருகிறார்.இதையடுத்து,சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து படக்குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.இதனால்,இப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சிம்பு தற்போது அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,”எனது ரசிகர்களுக்கும்,என்னை நேசிப்பவர்களுக்கும் ஒரு அழுத்தமான வேண்டுகோள்.திரைத்துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வருந்தாதீர்.எந்த ஒரு தனி நபரின் முடிவும் நம்மை ஓரங்கட்டிவிட முடியாது.எந்த முடிவாக இருந்தாலும்,அது குழு உறுப்பினர்களால்,கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.அதனால் பதற்றப்பட வேண்டாம்.யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.எப்போதுமே அன்பைப் பரப்புங்கள்.உங்களது தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.நாம்,நமது கடமையைச் செய்வோம்.தானாக வழி பிறக்கும்.பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம்”.என தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம்,ரஜினியின் பேட்ட என இரண்டு பெரிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்துள்ள நிலையில்,தன் படமும் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி எனத் தெரிவித்துள்ளார் சிம்பு.

மேலும் படிக்க