November 14, 2018 
தண்டோரா குழு
                                காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் கடந்த 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்றது.ரஜினியுடன் விஜய் சேதுபதி,நவாசுதீன் சித்திக்,சசிகுமார்,த்ரிஷா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.அண்மையில் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில்,இன்று ரஜினி மற்றும் சிம்ரன் இருக்கும் போஸ்டருடன் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தல அஜித்தின் விசுவாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.