November 10, 2018
தண்டோரா குழு
ரணில் விக்ரமசிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தீர்மானித்துள்ளது.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு,புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். எனினும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது. இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது,
அதில் ,அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி, சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வாதிகார ஆட்சியை இலங்கை அதிபர் நடத்தி வருவதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.