ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளியா யார் சொன்னது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.இதனால் அமைச்சர்கள் படம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்,
“ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும்.2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர்,ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார்.அப்போது ஜெயலலிதாவே என்னிடம்,”ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள்” என்று கேட்டார்.”நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே,ஏன் இப்படி சொல்கிறார்கள்” என்று என்னிடம் கேட்டார்.அமைச்சர்கள் படம் பார்த்து விட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை.நான் படம் பார்த்துவிட்டு,ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன் என கூறியுள்ளார்”.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு