• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தீபாவளிக்காக கொடுத்த துணிகளை தைத்து தரமுடியாததால் மன வருத்தத்தில் பெண் டைலர் தற்கொலை

November 7, 2018 தண்டோரா குழு

தீபாவளிக்காக கொடுத்த துணிகளை தைத்து தரமுடியாததால்,திருப்பூரைச் சேர்ந்த பெண் டைலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம்,முசிறி பகுதியைச் சேர்ந்தவர் பத்மினி.இவர் தன் கணவரைப் பிரிந்து தாய் அம்பிகா மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார்.திருப்பூரில் உள்ள பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு டைலர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.அவரது திறமையால் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் அவரிடம் துணிகளை கொடுத்து வந்துள்ளனர்.இதனால்,அவருக்கு அங்கு ஒரு நற்பெயரும் கிடைத்துள்ளது.

இதற்கிடையில்,தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழக்கம்போல கடந்த சில மாதங்களாகவே பலரும் ஆடைகளை தைத்துத் தர பத்மினியை அணுகியிருக்கிறார்கள்.தன்னால் இத்தனை துணிகளையும் தைக்க முடியாது என கூறிய போதும்,பலரும் அவரிடம் வற்புறுத்தி துணிகளை கொடுத்துள்ளனர்.எனினும்,ஆர்டர்கள் அதிகளவு குவியவே,இரவு பகல் பாராமல் அதிகப்படியான நேரம் துணி தைப்பதற்காக உழைத்திருக்கிறார் பத்மினி.

ஆனாலும்,தீபாவளி தினத்தில் சிலரது துணிகளை தைக்க முடியாமால் போனாதாக கூறப்படுகிறது.இதனால், மனமுடைந்த பத்மினி எங்கே இத்தனை ஆண்டுகள் பெற்று பெற்று வந்த தனது நற்பெயர் கெட்டுவிடுமோ என்ற எண்ணத்தில்,அவர் சானி பவுடரை கரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதயைடுத்து,தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார்,பத்மினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும்,பத்மினியின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே இந்தச் சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க