November 7, 2018
தண்டோரா குழு
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் கதை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவீட் செய்துள்ளது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
துப்பாக்கி,கத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இ இருக்கும் படம் ‘சர்கார்’.சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் நேற்று வெளியானது. சர்கார் படம் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி முதல் நாளிலே மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
முன்னதாக வருண் ராஜேந்திரன் என்பவர் தனது செங்கோல் படத்தின் கதையை திருடி,சர்கார் படம் எடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.இதற்கிடையில்,இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று,பின்னர் சமரசத்தில் முடிந்தது.
மெர்சல் பட விவகாரத்தில் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்கார் படம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில்,‘
“கதையைத் திருடுவது என முடிவு செய்து விட்டால்,நல்ல கதையாக திருட வேண்டியது தானே என்று குறிப்பிட்டுள்ளார்”.