November 7, 2018
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக இருவரும்,டெங்கு காய்ச்சல் காரணமாக இருவரும் என மொத்தமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது 14 வயது மகள் சுபஸ்ரீ, பன்றி காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்து நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.இதே போல அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த கதிர்வேல்(32)என்பவர்,நேற்று இரவு உயிரிழந்தார்.அதைபோல் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேட்டுபாளையத்தை சேர்ந்த போத்திராஜ்(57),மற்றும் சேலத்தை சேர்ந்த ராஜ்குமார்(39) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும்,காய்ச்சல் காரணமாக திருப்பூர்,நீலகிரி,கோவை,ஈரோடு,சேலம் போன்ற பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.