November 7, 2018
தண்டோரா குழு
வளர்ந்து வரும் நடிகரான விஜய் இது போன்று நடித்திருப்பது நல்லதல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள சர்கார் படம் நேற்று வெளியானது.ஓட்டு உரிமை குறித்தும் அரசியல் குறித்தும் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ,
“சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது,இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.சில காட்சிகள் படத்திற்காக இல்லாமல் அரசியலுக்காக வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழுவே நீக்கிவிட்டால் நல்லது.வளர்ந்து வரும் நடிகரான விஜய் இது போன்று நடித்திருப்பது நல்லதல்ல”.எனக் கூறியுள்ளார்.