• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னைக்கு இணையாக கோவையை மருத்துவ தலைநகராக மாற்றி வருகின்றோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

November 5, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர், மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணி சரியாக மேற்கொள்ளாமல் இருந்த தனியார் நிறுவன மேலாளர் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஊரக வளரச்சி துறை அமைச்சர் எஸ்.பி்.வேலுமணி ஆகியோர் தீடீர் மேற்கொண்டனர். அப்போது கோவை மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டம் முறையாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிக்கும் படி முதல்வர் காப்பீட்டு திட்ட சிறப்பு அலுவலர் உமா ஐ.ஏ.எஸ்க்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி சுகாதாரதுறை இயக்குனர் எட்வின்ஜோவிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசி மூலம் அறிவுறுத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆய்விற்கு பின்னர் அமைச்சர்கள் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,

கோவை அரசு மருத்துவமனையில் 67 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் டெங்கு காய்ச்சலாலும், 17 பேர் பன்றி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக இறப்பு இருக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கைகழுவும் பழக்கம் இருந்தால் 80 சதவீத நோய் தொற்று தடுக்கப்படும். பொது மக்கள் கைகழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார். ம
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணி சரியில்லாமல் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து துப்புரவு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன மேலாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு இணையாக கோவையை மருத்துவ தலைநகராக மாற்றி வருகின்றோம். காய்ச்சல் காரணமாக ஓருவர் கூட இறப்பு இருக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது எனவும்,காய்ச்சல் என்றவுடன் அரசு மருத்துவமனைக்கு வருவது சரியாக இருக்கும். மாநில எல்லைகளில் இருப்பதால் கோவை, நீலகிரி பகுதியில் பன்றி காய்ச்சல் தாக்கம் இருக்கிறது. சனி,ஞாயிறு விடுமுறை இல்லாமல் ,தீபாவளி விடுமுறை இல்லாமல் மருத்துவர்கள் ,ஊழியர்களை பணியாற்ற அறிவுறுத்தி இருக்கின்றோம். காய்ச்சல் காரணமாக வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்வது தொடர்பாக மருத்துவ ஊழியர்கள் மீது புகார்கள் வந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். படுகைவசதி இல்லாத தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் காரணமாக வருபவர்களை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றோம். தீபாவளி பண்டிகை நேரத்தில் தீத்தடுப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கும் படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் வேலுமணி ,

நோய் தடுப்பு பணிகளில் சுகாதார துறையுடன் இணைந்து உள்ளாட்சி துறை செயல்பட்டு வருகின்றது. 1.86 லட்சம் பேர் துப்புரவு பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க