• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் – சபாநாயகர் ஜெயசூர்யா

November 5, 2018

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் என சபாநாயகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டுப் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். எனினும் பெரும்பான்மையை நிரூபிக்காத ராஜபக்சே நியமனத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என தெரிவிக்கும் ரணில் தரப்பு, தாங்களே பதவியில் தொடர்வதாக அறிவித்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையில், ராஜபக்சேக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வரும் ஏழாம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளது.

இந்நிலையில் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும் வரை அவரைப் பிரதமராக ஏற்க முடியாது என்றும், பிரதமர் மாற்றத்துக்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய

அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தை கூட்டாமல் தாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வரும் 7-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்துவிட்டு தற்போது மாற்று தேதி அறிவித்ததற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க