• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜார்க்கண்ட்டில் முதல் முறையாக பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

November 3, 2018 தண்டோரா குழு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன் முறையாக பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகம் நக்சல் தாக்குதல் நடக்கும் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் கொண்டு வந்து சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் சிரமமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன் முறையாக பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த பைக் ஆம்புலன்ஸில் ஆம்புலன்சில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் மேற்பகுதியை எளிதாக மடிக்ககூடிய வசதி, இருபுறமும் சாயும் வசதியுள்ள இருக்கை, முதலுதவி பெட்டி என பல அம்சங்களுடன் இந்த ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான்கு சக்கர ஆம்புலன்ஸை வாகனங்களில் உள்ளது போல எச்சரிக்கை ஒலியை எழுப்பும் வசதியும் உள்ளது. முதலில் இந்த பைக் ஆம்புலன்ஸ் நக்சலைட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் நக்ஸல் தாக்குதல் நடத்தினால் காயமடைந்தவர்களை விரைவில் மருத்துவமனைக்குக் அழைத்துச்செல்ல முடியும் சாதாரண ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத பகுதிக்கும் சென்று சிகிச்சை அளிக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க