• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெற்காசியாவில் ஒரே ஒரு நாடு தான் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. பிரதமர் மோடி

September 6, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் ஜி20 நாடுகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘தெற்காசியாவில் பயங்கரவாதத்தை ஒரேயொரு நாடு தான் பரப்பி வருகிறது’ என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், இந்த அச்சுறுத்தலை ஸ்பான்சர் செய்பவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ஒரேயொரு தனிநாடு தெற்காசியாவில் நம் பகுதியின் உள்ள நாடுகளில் பயங்கரவாதத்தின் காரணிகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் கடுமையாக பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிராக ஜி20யின் சர்வதேச முயற்சிகள் பாராட்டுக்குரியது. அனைத்து நாடுகளும் அதற்கான நிதி நடவடிக்கை பணித்திட்டக் குழுவின் அளவுகோல்களை எட்ட வேண்டும்.

வன்முறை மற்றும் பயங்கரவாத சக்திகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதனை தங்களது அரசக் கொள்கையாகவே சில நாடுகள் கடைப்பிடித்து வருகிறது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

மேலும், தீவிரவாதத்தை ஒருகாலும் பொறுக்க முடியாத நாடுகளில் இந்தியா முதன்மையானது. நம்மைப் பொறுத்தவரை பயங்கரவாதி என்பவன் பயங்கரவாதிதான் என்று பிரதமர் மோடி. தெரிவித்தார்.

மேலும் படிக்க