சபரிமலை அய்யப்பன் கோவில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக வரும் 5ம் தேதி மாலை நடை திறக்கவுள்ள நிலையில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். ஆனால், பக்தர்கள் மற்றும் சன்பரிவார் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சபரிமலை ஐய்யப்பன் கோவில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக வரும் 5ம் தேதி மாலை நடைதிறக்கவுள்ளது. மேலும் 6ம் தேதி தீபாவளியன்று மட்டும் ஐய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுமார் 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும்.
இதற்கிடையில், பெண்கள் வருகையை கண்டித்து பக்தர்கள் மற்றும் இந்து சன்பரிவார் அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் போலீஸார் தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் எந்த அமைப்புகளும் கூடாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தவர்களும் கூடுவதை எளிதில் தடுத்துவிட முடியும்.போலீசார் கட்டுபாட்டில் சபரிமலை இருக்கும் என்று கூறப்படுகிறது.
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை