• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கலவரத்தை தழுவி எடுக்கபட்ட “தெளிவுப்பாதையின் நீச தூரம்” படத்திற்கு தடை

November 2, 2018 தண்டோரா குழு

கோவை என்றவுடன் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது பஞ்சாலைகளும்,1998ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமும் தான்.1997ல் கோவையில் நிகழ்த்தப்பட்ட கலவரம்,அதனையொட்டி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு க்ரவுட் ஃபண்டிங் முறையில் உருவான படம் “தெளிவுப்பாதையின் நீச தூரம்”.

`மதுபானக்கடை’ படத்தை இயக்கிய இயக்குநர் கமலக்கண்ணன்,ரோகினி,சார்லஸ் வினோத்,ராஜேஷ் பாலச்சந்திரன் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்தை அரவிந்த் என்பவர் இயக்கியுள்ளார்.இந்நிலையில்,இப்படத்திற்கு தணிக்கை துறையின் மறு ஆய்வுக்குழுதடை விதித்துள்ளது.எனினும்,இப்படத்தின் இயக்குநர் இப்படத்தை வெகுஜன பார்வைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில்,இது படைப்பு சுதந்திரத்திற்கும்,ஜனநாயகத்திற்கும் எதிரான செயல் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இந்த தடை குறித்து,இப்பட இயக்குநர் அரவிந்த்,`தெளிவுப்பாதையின் நீச தூரம்’ தனது போராட்ட பாதையை யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்யப்போவதில்லை.மக்களை சென்றடையும் வரை இந்த போராட்டம் ஓயாது.மக்களின் வலிகளையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஒரு திரைப்படம் பேசினால் அதை எப்படியாவது தடை செய்வோம் என்று அரசு தெள்ளத் தெளிவாக மீண்டும் மீண்டும் நமக்கு சொல்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க