• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயர்சிகிச்சைகளை வழங்க பிரீசினியஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை

November 2, 2018 தண்டோரா குழு

உலகின் தலைசிறந்த டயாலிசிஸ் சேவை வழங்கும் நிறுவனமான பிரீசினியஸ்,கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து புதிய டயாலிசிஸ் சேவை மையம் தொடங்குவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.பிரீசினியஸ் மருத்துவமனை,தமிழகத்தை மையமாக கொண்டதும்,தேசிய மருத்துவமனை மற்றும் சுகாதார சேவை அங்கீகார மையத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமும் ஆகும்.இந்த மருத்துவமனை 12 இடங்களில் டயாலிசிஸ் சேவை நிலையங்களை தொடங்க உள்ளது.இது கோவையில் அதிகாரிக்கும் டயாலிசிஸ் சேவைக்கு மிக முக்கிய பங்களிப்பாக உள்ளது.

இதுகுறித்து பிரீசினியஸ் மருத்துவ சேவை மையத்தின் நிர்வாக இயக்குனர் புனித் கோலி கூறுகையில்,

“இந்தியாவில் டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் என்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்நிலையில் சிறந்த முறையில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கும் புதிய மையங்கள் அவசரத் தேவையாக இருக்கின்றன.இப்போது தொடங்க உள்ள புதிய மையம்,நோயளிகளுக்கு அதிநவீன சிகிச்சையை சிறந்த மருத்துவ வல்லுனர்கள் மற்றும் செளகரியத்தை வழங்க இருக்கிறது.ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து கோவை வட்டாரத்தில் சிறுநீரக கோளாறுகளால் அவதியுறும் நோயாளிகளின் தேவைகளுக்கான புகலிடமாக விளங்கும் புதிய சேவை மையத்தை உருவாக்கி உள்ளோம்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க