• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

November 1, 2018 தண்டோரா குழு

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையின் போது வாகன ஆய்வாளர் மாரடைப்பால் உயிழந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம்,வாகன பதிவு புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அதிகளவிலான லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி அளவில் அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளிவாயில் கதவை அடைத்தும் வெளியிலிருந்து யாரும் உள்ளே நுழையவும்,உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும் தடை விதித்தனர்.

இந்நிலையில்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையின் போது கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக (break) ஆய்வாளர் பாபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து,அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தது தெரியவந்தது.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார்.மகன் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

மேலும்,லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்ததால் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு,வாந்தி எடுத்தும் நடிப்பதாக கூறி லஞ்ச ஒழிப்பு துறையினர் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க