• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொகுசு வசதிகள் கொண்ட ரயில்களின் கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு!

November 1, 2018 தண்டோரா குழு

பிரிமியம் ரயில் என்றழைக்கப்படும் பல்வேறு சொகுசு மற்றும் குளிர்சாதன வசதிகள் கொண்ட ரயில்களின் கட்டணங்களை பாதியாக குறைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ராஜதானி,துரந்தோ,சதாப்தி போன்ற சொகுசு ரயில்களின் கட்டணம் சில சமயங்களில் விமானங்களின் கட்டணங்களை விட அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.இதனால் சுமார் 100 ரயில்களின் கட்டணத்தை பாதியாக குறைப்பது என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ரயில் புறப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்பு முன்பதிவு செய்தால் காலியாக உள்ள இடங்களுக்கு இந்த கட்டணச் சலுகையைப் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் 40 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளுடன் செல்லும் ரயில்களிலும் 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.விரைவில் இந்த கட்டணக் குறைப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க