சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்க்கார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.இந்நிலையில்,மதுரை மாவட்டத்தில் சில தியேட்டர்களில் சர்கார் திரைபடத்திற்கு தியேட்டர் விலையை விட பலமடங்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இவ்வழக்கினை இன்று விசாரணைக்கு கொண்டு வந்த மதுரை உயர்நீதிமன்றம்,சர்கார் திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும்,டிக்கெட் கட்டணத்தை கண்காணித்து,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்