• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகை!

November 1, 2018 தண்டோரா குழு

சமூக ஊடங்களில் #MeTooஎன்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள்,குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் தற்போது இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது.சினிமா பிரபலங்கள்,அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை metoo மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும்,நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறியுள்ளார்.கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ‘வானவில்’ தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ந்து ரஜினிகாந்த்,தனுஷ்,ஜோதிகா,விக்ரம்,சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தவர் நடிகை மாயா கிருஷ்ணன்.இந்நிலையில்,மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும்,நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் #MeTooவில் பாலியல் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அனன்யா ராம்பிரசாத் கூறுகையில்,

“எனக்கு வயது 18 இருக்கும் போது மாயா கிருஷ்ணனை சந்தித்தேன்.மாயா எனக்கு வழிகாட்டியாக நிறைய ஆலோசனைகள் கூறினார்.அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன்.அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம்.ஒரு கட்டத்தில் மாயா தன்னுடன் மட்டும்தான் நான் பழக வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார்.என்னை கட்டிப்பிடித்தார்,முத்தமிட்டார்.பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார்.மெதுவாக எனது நண்பர்களை துண்டித்து அவர்கள் என்னை வெறுக்க செய்தார்.எனது பெற்றோர்களையும் ஒதுக்க செய்தார்.நான் தன்னம்பிக்கையையும்,சுயமரியாதையையும் இழக்க தொடங்கினேன்.என் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்தார்.அவருடன் ஒரே அறையில் ஒரே மெத்தையில் தூங்குவது சாதாரண வி‌ஷயமானது.ஒரு கட்டத்தில் தவறாக சிக்கியதை உணர்ந்தேன்.பிறகு அதில் இருந்து மீண்டு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன்” என்று கூறி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க