• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏறுமுகத்தில் தமிழக பள்ளிக்கல்வி ! – பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனி சேனல்

October 31, 2018 தண்டோரா குழு

பள்ளிக்கல்வித் துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முன்னாள் ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து வருகிறது. எனினும் அதிமுக ஆட்சி குறித்து பலருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பள்ளி கல்வித்துறை குறித்து பெருமை கொள்வார்கள். ஏனெனில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் தமிழக மாணவர்களின் நலனுக்காக அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த திட்டமாக பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையத்தில் துணை மின் நிலையத்தை திறந்து வைத்த அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறைக்கென உருவாக்கப்படும் இந்த தொலைக்காட்சி சேனலில் கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். ஸ்டூடியோ உருவாக்கப்பட்டு சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் TN SCERT என்னும் Youtube சேனல் செயல்பட்டு வருகிறது. இந்த சேனலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பாடதிட்டத்தில் உள்ள பாடப்புத்தக தகவல்கள் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எளிய வழியில் குழந்தைகள் தங்களது பாடங்களை புரிந்துக்கொள்ள இந்த வீடியோக்கள் உதவி வருகின்றன. சுமார் 2,884 வீடியோக்களை கொண்டுள்ள இந்த சேனல் பள்ளி குழந்தைகளுக்கு பெருமளவில் உதவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க