• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் திருநங்கையை மணந்த இளைஞர்!

October 31, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெறவிருந்த திருங்கை திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த நிலையில் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த ரயில்வே ஒப்பந்த ஊழியரான அருண்குமாரும், வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் பி.ஏ. படித்துவரும் ஸ்ரீஜா என்ற திருநங்கையும் காதலித்துள்ளனர். தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் சங்கர ராமேஸ்வரர்கோவில் உள்ளது. இக்கோயிலில் இவர்கள் திருமணம் இன்று காலை 10.45 மணிக்கு நடைபெற இருந்தது. இருகுடும்பத்தின் சமதத்துடன் நடக்கவிருந்த திருமணத்திற்கு முதலில் சிவன் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தம்பதிகள் கோவிலுக்கு வந்தபோது, அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருமணம் செய்தபின்னர், நீதிமன்றத்தை அணுகி, சான்றிதழ் பெற அறிவுறுத்தினர். இதையடுத்து, திருநங்கைக்கும் – இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் படிக்க