 October 30, 2018
October 30, 2018  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 59-வது படத்தை சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இதனை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளனர்.இந்த படம் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ (Pink) படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான இப்படத்தில் அமிதாப் பச்சன்,டாப்சி நடித்திருந்தனர்.
இந்நிலையில்,தற்போது இப்படத்திற்குஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகிறது.இந்த செய்தி உண்மை என்ற பட்சத்தில்,அஜித்,எச்.வினோத்,ஏ.ஆர்.ரஹ்மான்,போனி கபூர் என பிரம்மாண்ட கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படத்தின் மூலம் நஸ்ரியா தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.