• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரேக் அப் சொன்ன காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலன் !

October 29, 2018 தண்டோரா குழு

கருத்து வேறுபாட்டால் காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால்,ஆத்திரத்தில் காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலனின் வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மாணவன் ப்லூரி.இவர்,ஹேயஸ் என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.ஆனால்,ஒரு கட்டத்திற்கு மேல் அதனை தாங்கி கொள்ளமுடியாத ஹேயஸ்,காதலன் ஃப்லூரியை விட்டு பிரியப்போவதாக அவரிடம் கூறியுள்ளார்.அப்போது,பிரிவதற்கு முன்பு ஃப்லூரி தனது காதலியை முத்தமிட முயற்சித்துள்ளார்.ஆனால் அதனை விரும்பாத ஹேயஸ் அவரை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஃப்லூரி,தனது காதலி என்றும் பாராமல் ஹேயஸின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.

இதையடுத்து,வலியால் துடித்த ஹேயஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்தார்கள்.அவரது வாய்ப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட தையல்கள் போட்ட மருத்துவர்கள்,கடும் சிரமத்திற்கு பிறகு உதட்டை ஒட்ட வைத்துள்ளனர்.

இதனையடுத்து காதலியின் உதட்டை கடித்த புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.இச்சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க